நாட்டிற்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் கடந்த மாதம் வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கடந்த மாதத்தில் மாத்திரம் 2 லட்சத்து 18 ஆயிரத்து 350 பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
கடந்த 2023 ஆம் ஆண்ட பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும் போது 2 மடங்கு எண்ணிக்கையிலானவர்கள் கடந்த மாதம் வருகை தந்தள்ளதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சர் குறிபப்pட்டுள்ளார்.
கொரோனாத் தொற்றுக்கு முன்னர் 2020 ஜனவரியில் 2 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் நாட்டிற்கு வருகை தந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வருடத்தின் கடந்த 2 மாதங்களிலும் 2 இலட்சத்திற்கு மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வரகை தந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் நாட்டிற்கு 710 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருவாய் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.