குடு சலிந்துவுக்கு மார்ச் 25 வரை விளக்கமறியல்!

0
82

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குடு சலிந்து என அழைக்கப்படும் சலிந்து மல்ஷிக குணரத்ன மார்ச் மாதம் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பாணந்துறை பிரதான நீதவான் சம்பிகா ராஜபக்ஷ இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

சந்தேக நபர் மார்ச் 13, 2023 அன்று மடகஸ்கரில் கைது செய்யப்பட்டதாகவும், சர்வதேச பொலிஸாரிடம் இருந்து சிவப்பு பிடியாணையைப் பெற்று விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.