வவுனியாவில் பேருந்து மோதியதில் நபர் ஒருவர் உயிரிழப்பு

0
91

வவுனியா பூவரசங்குளத்தில், பேருந்தில் ஏற முற்பட்ட நபர், பேருந்து மோதிய நிலையில் உயிரிழந்துள்ளார்.

வவுனியாவில் இருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த தனியார் பேருந்து, பூவரசங்குளம் சந்தியில் உள்ள பேருந்து தரிப்பிடத்தில் தரித்து நின்ற போது, அதில் ஏற முற்பட்ட நபர், பேருந்தில் சிக்குண்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில், பூவரசங்குளம் மணியர்குளம் பகுதியை சேர்ந்த 76 வயதான முதியவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பூவரசங்குளம் பொலிஸார், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்ததுடன், சாரதியையும் கைது செய்தனர்.