சித்திரைப் புத்தாண்டு காலத்தில், நீண்ட தூர பேருந்து பயணங்களின் போது, பெறுமதியான பொருட்களை திருடும் கும்பல்கள் தொடர்பில், பொது மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என, பொலிஸ் திணைக்களம், இன்று அறிவித்துள்ளது.
இந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள், சாதாரண பயணிகளைப் போல, நீண்ட தூரப் பேருந்துகளில் ஏறி, பயணிகளின் விலை உயர்ந்த பொருட்களை திருடிச் செல்கின்றனர்.
எனவே பயணிகள், பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்கள், மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.
பதுளை- கொழும்பு பேருந்துகளில், இந்த திருட்டுச் சம்பவங்கள் அதிகம் இடம்பெறுகின்றன. என பொலிஸ் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.