உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதிகோரி மட்டக்களப்பில் கவனயீர்ப்புப் போராட்டம்

0
114

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதிகோரியும் தாக்குதலின் சூத்திரதாரிகளுக்கு தண்டனைபெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தியும் மட்டக்களப்பில் இன்று
கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.


மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்திபூங்காவில் போராட்டம் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.சிவயோகநாதன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், மதத்தலைவர்கள்,அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்,பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின்போது கொல்லப்பட்டவர்கள் நினைவாக காந்திபூங்காவில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வும்நடைபெற்றது. தொடர்ந்து படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபி முன்பாக கவன ஈர்ப்பு போராட்டமும்
முன்னெடுக்கப்பட்டது.