மட்டக்களப்பு ஒந்தாட்சிமடம்மகா வித்தியாலயத்திற்குடென்மார்க் ரோட்டரிக் கழகத்தால்உதவி

0
74

மட்டக்களப்பு ஒந்தாட்சிமடம் மகா வித்தியாலத்திற்கு டென்மார்க் ரோட்டரிக் கழகத்தால், வழங்கப்பட்ட கற்றல் உபகரணங்களைக்
கையளிக்கும் நிகழ்வு, வித்தியாலய அதிபர் மதிவதனி பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது. இப் பாடசாலையானது 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரலை காரணமாக அழிவடைந்ததன் காரணத்தினால் புதிதாக பிறிதொரு இடத்தில் நிர்மாணிக்கப்பட்டது.


அதன் நிர்மாணப் பணிகளை டென்மார்க் நாட்டின் ரோட்டரி கழகப் பிரதிநிதிகளே முன்னெடுத்திருந்தனர். அன்று முதல் தொடர்ச்சியாக பாடசாலையின் வளர்ச்சிக்கும் பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றனர். டென்மார்க் நாட்டின் ரோட்டரி கழகத்தின் மாவட்ட முன்னாள் ஆளுநர் கேஜ்.அண்டக்ஷன் அவர்களுடன் மட்டக்களப்பு நகர் ரோட்டரி கழக தலைவர் எம்.செல்வராசா ஆகியோர் இணைந்து 11 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை பாடசாலைக்கு கையளித்தனர்.