மட்டக்களப்பு காத்தான்குடியில்மட்டக்களப்பு மத்தி கல்விவலயத்தின் புதிய வலயக் கல்விப்பணிப்பாளருக்கு வரவேற்பு

0
82

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் புதிய வலயக் கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அப்துல் ஜவாட் நழீமிக்கு மட்டக்களப்பு காத்தான்குடி பள்ளி வாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தினால் இன்று மாலை வரவேற்பளிக்கப்பட்டது.


காத்தான்குடி பள்ளி வாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன தலைவர் பொறியியலாளர் ஏ.எம்.தெபீக் தலையில் நிகழ்வு இடம் பெற்றது.
இதன் போது புதிய வலயக் கல்விப் பணிப்பாளர் நினைவுச் சின்னம் வழங்கி கொளரவிக்கப்பட்டார்.


நிகழ்வில் சம்மேளன செயலாளர் மௌலவி இல்ஹாம், பொருளாளர் இர்பான், பிரதி தலைவர் அப்துல் சத்தார், உட்பட உலமாக்கள் சம்மேளன நிருவாக சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.