![dead body with a blank toe tag, in monochrome](https://eelanadu.lk/wp-content/uploads/2024/02/03-18-696x462.jpg)
கிரிஉல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கஜுவெட்டியவத்த வயல் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படா நிலையில், அவர் 50 முதல் 60 வயதுக்கு இடைப்பட்டவராக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
நிர்வாண நிலையில் அடையாளம் காண முடியாத அளவுக்கு சடலம் சிதைவடைந்துள் ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
சடலம் குளியாபிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கிரிஉல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.