மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலகத்தில் உலக புகைத்தல் தடுப்பு தினத்தையொட்டி விழிப்பூட்டல் செயலமர்வொன்று இன்று காத்தானு;குடி பிரதேச செயலக மாநாட்டு
மண்டபத்தில் நடைபெற்றது
காத்தான்குடி பிரதேச செயலாளர் உதயசிறீதர் தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு செயலமர்வில் புகைத்தல் பாவனையால் ஏற்படும் பாதிப்புகள்
தொடர்பாகவும் வறுமை தொடர்பாகவும் விளக்கிக் கூறப்பட்டது
காத்தான்குடி பிரதேச செயலக சமுதாயஞ் சார் அபிவிருத்தி உத்தியோகத்தர் ரசூல் சா உட்பட நான்கு உத்தியோகத்தர்கள் விரிவுரையாளர்களாக
கலந்து கொண்டு விழிப்பூட்டல் செய்தனர்
புகைத்தலினால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பான புகைப்படங்களும் பதாதைகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
நிகழ்வில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் மகளிர் சங்கப் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
Home கிழக்கு செய்திகள் மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலகத்தில் உலக புகைத்தல் தடுப்பு தினத்தையொட்டி விழிப்பூட்டல் செயலமர்வு