29 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

பெங்களூருவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது ராஜஸ்தான்

17-வது ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற வெளியேற்றுதல் சுற்றுப் போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் – ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.  போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கோலி மற்றும் டு பிளெஸ்சிஸ் ஆகியோர் களம் இறங்கினர். இதில் டு பிளெஸ்சிஸ் 17 ஓட்டங்கள், கோலி 33 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர்.

இதையடுத்து கேமரூன் க்ரீன் மற்றும் ரஜத் படிதார் ஆகியோர் களம் இறங்கினர். இதில் க்ரீன் 27 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க இதையடுத்து களம் புகுந்த மேக்ஸ்வெல் டக் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். இதன் காரணமாக படிதார் உடன் லோம்ரோர் ஜோடி சேர்ந்தார். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய படிதார் 22 பந்தில் 34 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க இதையடுத்து களம் இறங்கிய தினேஷ் கார்த்திக் 11 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இதையடுத்து இம்பேக்ட் வீரராக ஸ்வப்னில் சிங் களம் புகுந்தார்.

இறுதியில் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 172 ஓட்டங்கள் எடுத்தது. பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக ரஜத் படிதார் 34 ஓட்டங்கள் எடுத்தார். ராஜஸ்தான் தரப்பில் அவேஷ் கான் 3 விக்கெட் வீழ்த்தினார்.  இதையடுத்து 173 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 19 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 174 ஓட்டங்களைப் பெற்று வெற்றிப் பெற்றது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles