மட்டக்களப்பு மயிலம்பாவெளி கருணாலயத்தில் இரத்ததான முகாம்

0
108

மட்டக்களப்பு மயிலம்பாவெளி கருணாலயத்தின் ஸ்தாபகர் பரமலிங்கம் அவர்களின் ஸ்தாபக தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம் இன்று நடைபெற்றது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் நிலவும் இரத்தப்பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் வகையில் இரத்ததானமுகாம் நடைபெற்றது.


ஆன்மீக ரீதியான சேவைகள் மற்றும் வறிய நிலையில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தல் போன்ற செயற்பாடுகளில் கருணாலயம் ஈடுபட்டுவருகின்றது. ஸ்தாபக தினத்தை முன்னிட்டு 08வது ஆண்டாகவும் இன்றைய தினம் இரத்ததானமுகாம் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்ததுடன் இதன்போது இயற்கையினை மேம்படுத்தல் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் வழங்கப்பட்டதுடன் வறிய மக்களுக்கான உலர் உணவுப்பொதிகளும் வழங்கப்பட்டன.
கருணாலயத்தின் ஊழியர்கள்,மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள், ஊழியர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது ஸ்தாபக தினத்தினை முன்னிட்டு சிரமதான பணிகளும் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.