கிழக்கு மாகாணத்தில் இன்று வழங்கப்படவிருந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனம் கல்முனை மேல் நீதிமன்றத்தினால் நேற்று வழங்கப்பட்டுள்ள இடைக்கால தடை உத்தரவின் மூலம் தடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 5 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. அதுவரை நியமனம் எதுவும் வழங்க கூடாதென பிரதிவாதிகளுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குரல்கள் இயக்க சட்டத்தரணிகள் மேற்கொண்ட முயற்சியினால் இந்த இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.