மட்டக்களப்பு ஆரையம்பதியில் இடம்பெற்ற ‘விளைச்சலை அதிகரித்தல்’எனும் விழிப்பூட்டல் நிகழ்வு

0
68

மட்டக்களப்பு ஆரையம்பதி விவசாய போதனாசியர் பிரிவிலுள்ள சிகரம் கிராமத்தில் விவசாய திணைக்களத்தினால் மாமரச் செய்கையில் கத்தரித்தல் பயிற்சி ஊடாக விளைச்சலை அதிகரித்தல் எனும் விழிப்பூட்டல் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

ஆரையம்பதி விவசாய போதனாசியர் திருமதி முபீதா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் விவசாய திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட விவசாய விரிவாக்க பிரதிப் பணிப்பாளர் எம்.பரமேஸ்வரன் உட்பட விவசாய போதனாசியர்கள் விவசாய கம நல அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் போது விவசாய திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட விவசாய விரிவாக்க பிரதிப் பணிப்பாளர் எம்.பரமேஸ்வரன் அவர்களுக்கு விவசாய கமநல அமைப்புக்களினால் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கொளரவிக்கப்பட்டது.