‘சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தொகை நடவடிக்கைக்கு அனைத்து நாடுகளின் ஒத்துழைப்பும் அவசியம்’ – செஹான் சேமசிங்க

0
101

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் இரண்டாவது மதிப்பாய்வு நடவடிக்கைக்கு அனைத்து நாடுகளின் ஒத்துழைப்பும் அவசியம் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.அரசாங்க தகவல் திணைக்களத்தின் இன்றைய அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு வழங்கப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் இரண்டாவது மதிப்பாய்வு இந்த மாதம் 12 ஆம் திகதி நடைபெறவிருக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் நிகழ்ச்சி நிரலில் இணைக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் அவற்றின் முன்னேற்றம் குறித்து மதிப்பீடு செய்யப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பொருளாதார ஸ்திரத்தன்மையை உருவாக்குவதற்கான மூன்றாவது தவணையை வழங்குவது இங்கு பரிசீலிக்கப்படுகிறது, மேலும் இது அனைத்து நாடுகளின் தொடர்ச்சியான ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.