கிழக்கு மாகாணத்தில் 224 ஆண்டுகள பழமைவாய்ந்த புளியந்தீவு புனித அந்தோனியார் திருத்தல திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
திருத்தலத்தின் திருவிழா கொடியேற்றம் நேற்று மாலை பங்குத்தந்தை நிகொலாஸ் ஜூட் தலைமையில் ஆரம்பமானது.
தொடர்ந்து நவநாள் திருப்பலி இடம்பெற்று, புனிதரின் திருச்சொருப பவனி எதிர்வரும் 12 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. திருவிழா திருப்பலி மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் அருட்கலாநிதி பொன்னையா யோசப் ஆண்டகை தலைமையில்
எதிர்வரும் 13ம் திகதி கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.