மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் உறுமய வேலை திட்டத்தின் கீழ் காணி ஆவணங்களை பெற்றுக் கொள்வதற்கான ஆலோசனை நடமாடும் சேவை இன்று நடைபெற்றது.
காத்தான்குடி பிரதேச செயலாளர் உதய சிறீதர் தலைமையில், நூராணியா ஜும்மா பள்ளிவாயலில் நடமாடும் சேவை இடம்பெற்றது.
காணி அளிப்பு பத்திரம் வைத்திருப்பவர்கள் அல்லது காணி அனுமதி பத்திரங்களை வைத்திருப்பவர்கள் தங்களது ஆவணங்களை சமர்ப்பித்து தேவையான ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் பெற்றுக் கொண்டனர்.
உதவி பிரதேச செயலாளர் திருமதி சீல்மியா உட்பட காத்தான்குடி பிரதேச செயலக காணிப்பிரிவு அதிகாரிகளும் நடமாடும் சேவையில் கலந்து கொண்டனர்