மக்கள் விடுதலை முன்னணியினரிடத்தில் மிலேச்சத்தனம் – சமன் ரத்னபிரிய

0
71

மக்கள் விடுதலை முன்னணியினரிடத்தில் மிலேச்சத்தனமே காணப்படுவதாக ஜனாதிபதியின் தொழிற்சங்க பணிப்பாளர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறி கோத்தாவில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மாகாண சபை முiறைமையை தொடர்ச்சியாக நடைமுறையில் இருக்க வேண்டும் என்ற கருத்தை மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க கூறுகின்றனார்.ஆனால் இதே மக்கள் விடுதலை முன்னணியே இந்தியாவினை எதிர்த்ததுடன், மாகாணசபை முறைமையை கடுமையாக விமர்சிதத்து . ஆனால் தற்போது இந்த அளவிற்கு கருத்துரைக்கின்றார்களாயின் அவர்களின் கட்சியின் ; வீழ்ச்சியே இதன் ஊடாக புலப்படுகின்றது .

அநுரகுமார திசாநாயக்க தரப்பினர்கள் தவறும் தருணங்களில் ஏராளமான மக்கள் உயிரிழக்கும் நிலைகள் ஏற்படுகின்றன.ஆகவே அவர்களின் கொள்கை தொடர்பில் மக்கள் சிந்திக்க வேண்டியது அவசியமாகும். .அவர்களால் அரசியலை கட்டியெழுப்ப முடியாது. அவர்களிடத்தில் மிலேச்சத்தனமே உள்ளது.