சட்டவிரோத மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க ‘டிரோன்’ பயன்படுத்தப்படும் – நிஷாந்த எதிரிசிங்க !

0
50

 இலங்கையின் வன அமைப்பில் சட்டவிரோத மரங்கள் வெட்டப்படுவதைத் தடுப்பதற்காக ‘டிரோன்’ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என வன பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நிஷாந்த எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.

‘ட்ரோன்’ தொழில்நுட்ப கண்காணிப்பு மூலம் பெறப்படும் தரவுகள் மூலம் அடையாளம் காணப் படுபவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

கண்டியில் உள்ள உடவத்தை வனப்பகுதியை துவிச்சக்கர வண்டியில் பார்வையிடும் வாய்ப்பை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கும் வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு பணிப்பாளர் நாயகம் இதனைத் தெரிவித்தார்.

இந்த நாட்டில்  29%  சதவீதமாக ஆக குறைந்துள்ளது அடர்ந்த  வனத்தை அதனை   32% சதவீதமாக உயர்த்த திட்டமிடப் பட்டுள்ளதாகவும் அதற்கான .பல வேலைத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், வன நிலத்தை அனுமதியின்றி கையகப்படுத்துவதை தடுக்க நவீன தொழில்நுட்பத்தை அதிகபட்சமாக பயன்படுத்த எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

கண்டி உட்பட பல மாவட்டங்களில் காட்டுத் தீ பரவி வருவதாகவும், இதனால் வன அமைப்புக்கு பெரும் சேதம் ஏற்படுவதாகவும் இதனைத் தடுப்பதற்கு பொதுமக்களுக்கு   தொடர்பில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்த  அறிவித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது 

இந்நிகழ்வில் வனவள திணைக்கள அதிகாரிகள், கண்டி பாதசாரிகள் சங்க உறுப்பினர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் குழுவினர் கலந்துகொண்டனர்.