ஒரு ஆசனத்தை ஜனாதிபதியாக்கும் வல்லமை ஐக்கிய தேசிய கட்சிக்கு உள்ளது – வஜிர அபேகுணவர்த்தன

0
65

ஒரு தேசிய பட்டியல் ஆசனத்தை நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக்கும் வல்லமை ஐக்கிய தேசிய கட்சிக்கு உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ரணில் இருக்கும் வரை ஐக்கிய தேசியக்கட்சியால் ஜனாதிபதி ஒருவரை உருவாக்க முடியாது என எம்மிடமிருந்து விலகி சென்றவர்கள் கூறினர்.
ஆனால் ஒரு ஆசனம் மாத்திரமே ஐக்கிய தேசியக்கட்சிக்கு இருந்தது. அந்த ஆசனமும் தேசிய பட்டியலின் ஊடாக கிடைக்கப்பெற்றதாகவே இருந்தது.
ஆனால் சிறிது மாதங்கள் கடந்த நிலையில அந்த ஆசனத்தை கொண்டு நாட்டின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை உருவாக்க முடிந்துள்ளது. அந்த வல்லமை ஐக்கிய தேசியக்கட்சிக்கே உள்ளது.