வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கான முன்மொழிவுகளை நிறைவேற்றுவதற்காக ஜூலை 02 மற்றும் 03 ஆம் திகதிகளில் விசேட பாராளுமன்ற அமர்வு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை கூடிய பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்ததாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.முழு நாட்டு மக்களினதும் கவனமும் இந்த விடயத்தில் குவிந்துள்ளதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ஜூலை 02ஆம் திகதி பாராளுமன்றத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட உரையொன்றை நிகழ்த்திய பின்னர் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகள் தொடர்பிலான விவாதமும் நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.