வரலாற்று சிறப்பு மிக்க கதிர்காமம் ஆலயத்தை சுற்றியுள்ள ஐந்து பாடசாலைகளுக்குகதிர்காம கந்தனின் உற்சவத்தை முன்னிட்டு விசேட விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கதிர்காமம் பிரதேச செயலாளர் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, தெடகமுவ கனிஷ்ட வித்தியாலயம், கதிர்காமம் தேசிய பாடசாலை, செல்ல கதிர்காமம் மகா வித்தியாலயம், சசீந்திர குமார ஆரம்ப பாடசாலை மற்றும் கோதமி கனிஷ்ட வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கே விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

கதிர்காம உற்சவம் முடிவடையும் வரை மேற்குறிப்பிட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் திகதி அறிவிக்கப்படும் என கதிர்காமம் பிரதேச செயலாளர் பிரிவு தெரிவித்துள்ளது.