தோட்டங்கள் கிராமங்கள் ஆகின்றன!

0
57
பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள தோட்டப் பகுதிகளைக் கிராமங்களாகப் பெயரிடுவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.இதற்கான வர்த்தமானி அறிவிப்பினை வெளியிடுவதற்கு நேற்று கூடிய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் பாராளுமன்றில் வைத்து இதனைத் தெரிவித்தார். தங்களின் ஆலோசனையுடன் ஜனாதிபதி இதற்கான யோசனையை முன்வைத்து, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.