மட்டக்களப்பு காத்தான்குடி ஜாமியத்துல் பலாஹ் அரபுக் கல்லூரியின் முன்னாள் அதிபர் மர்ஹூம் ஷைகுல் பலாஹ் அப்துல்லாஹ் ரஹ்மானி ஹஸரத்தின் 8வது வருட ஞாபகார்த்த நிகழ்வு இன்று மாலை காத்தான்குடி ஜாமியத்துல் பலாஹ் அரபுக் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.
காத்தான்குடி ஜாமியத்துல் பலாஹ் அரபுக் கல்லூரி பழைய மாணவர் அமைப்பின் ஏற்பாட்டில் அதன் தலைவர் மௌலவி அஸீஸ் பலாஹி தலைமையில் நடைபெற்ற
நிகழ்வில் புனித அல்குர்ஆன் ஓதப்பட்டு விஷேட பிராத்தனையும் இடம் பெற்றது
காத்தான்குடி ஜாமியத்துல் பலாஹ் அரபுக் கல்லூரியின் பிரதி அதிபர் மௌலவி எஸ்.எம்.அலியார் ஹசரத் மற்றும் விரிவுரையாளர்கள். உலமாக்கள் பிரமுகர்கள் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
விஷேட உரையை மௌலவி அப்துஸ் சலாம் பலாஹி நிகழ்த்தியதுடன் விஷேட துஆப் பிராத்தனையை மௌலவி அமீன் பலாஹி நடாத்தினார். கவிமணி மௌலவி எம்.எச்.எம். புகாரி பலாஹி எழுதிய சிறப்புக் கவிதையை மௌலவி பாஹிம் பலாஹி வாசித்தார். விஷேட இப்தார் நிகழ்வும் இடம் பெற்றது