25 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மனைவிக்காக 320 கி.மீ பயணம் செய்யும் கணவன்! – சீனாவில் சம்பவம்

கிழக்கு சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் உள்ள வெய்பாங் நகரில் வசிப்பவர் லின் ஷூ(31), இவர் கடந்த ஏழு ஆண்டுகளாக தான் காதலித்துவந்த பெண்ணை இந்தாண்டு மே மாதம் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்பும் லின் தனது மனைவியின் மீது கொண்ட காதல் சற்றும் குறையவில்லை. லின்னின் மனைவியின் சொந்த ஊர் வெயிபாங். திருமணத்திற்கு முன்பு வாடகை வீட்டில் லின் வசித்து வந்தார். அங்கிருந்து ஒரு மணி நேரத்திற்குள் அவர் வேலை செய்யும் இடத்தை அடைந்துவிடுவார்.

இந்நிலையில் திருமணத்திற்குப் பின்னர், காதல் மனைவி சொந்த ஊரிலேயே வேலை செய்து வந்ததால், அவருடன் அதிக நேரம் செலவிட விரும்பியும், அங்கேயே பிளாட் ஒன்றை வாங்க முடிவு செய்தார். சொந்த ஊரிலேயே வசிப்பிடம் இருந்தால் பாதுகாப்பாக இருக்கும் என்பதை உணர்ந்த அவர் அங்கேயே பிளாட் ஒன்றை வாங்கி குடியேறினார்.

தற்போது வாங்கிய பிளாட்டிலிருந்து அவர் அலுவலகத்திற்குமான இடைவெளி 160 கி.மீ. தொலைவாகும். எனவே, தினமும் அவர் வேலைக்குச் சென்று திரும்பவேண்டுமென்றால் 320 கி.மீ தூரம் பயணிக்க வேண்டும். ஆனால் காதல் மனைவிக்காக சற்றும் சலிப்படையாமல் பயணித்து வந்துள்ளார். தினமும் அவர் பயணத்தின் விடியோ பதிவுகளை அந்த நாட்டின் சமூக ஊடக தளமான ட்டுயினில் பதிவிட்டுள்ளார்.

இதன்படி அவர் தினமும் அதிகாலை 5 மணிக்கு எழுந்து வெயிபாங்கில் உள்ள தனது வீட்டை விட்டு 5.20 மணியளவில் புறப்படுவாராம். அதன் பின்னர் மின்சார வாகனத்தில் 30 நிமிடம் பயணித்து காலை 6.15க்கு ரயில் நிலையம் சென்றடைவார். பிறகு ஷான்டாங்கின் கிழக்குப் பகுதியில் உள்ள குயிங்டாவோ நகருக்கு காலை 7.46க்கு மணிக்கு வந்தடையும் லின், ரயிலிலிருந்து இறங்கி 15 நிமிடங்கள் நடைப்பயணமாக வேலை செய்யும் இடத்தை அடைவாராம். காலை 9 மணிக்கு வேலையைத் தொடங்கும் லின், பணி முடிந்த பிறகு மீண்டும் நான்கு மணி நேரம் பயணித்து தனது வீட்டை அடைவார்.

இதனிடையே சமூக ஊடகத்தில் லின் பதிவிட்ட பயணத்தின் நேரம் குறித்து பலரும் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். இதுதொடர்பாக அவரிடம் சமூக ஊடகத்தின் வாயிலாகக் கருத்துக்கேட்டபோது எல்லாம் என் காதல் மனைவிக்காக, இந்த பயணம் எனக்கு சலிப்பை ஏற்படுத்தவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், அவரது சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, லின்னின் மேலாளர் கூடுதல் நேரம் வேலை செய்ய அவருக்குக் கட்டளையிடுவதில்லையாம்.

அவர் தனது மனைவி குயிங்டாவோவில் வேலை தேடுவதால், இந்த பயணம் தற்காலிகமானது. குயிங்டோவில் வேலை கிடைத்ததும் அந்த நகரிலேயே வசிக்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles