மூக வலைத்தளமான எக்ஸ் தளம், பிரேசில் உயர் நீதிமன்ற தீர்ப்பை மீறியதால், அதற்கு அந்நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரேசிலில் கடந்த 2022ல் நடந்த பொதுத்தேர்தலை மையப்படுத்தி எழுந்த சர்ச்சைகளையடுத்து, பிரேசலின் முன்னாள் ஜனாதிபதி போல்சொனரோவிள் ஆதரவாளர்களான சில தீவிர வலதுசாரிகளின் எக்ஸ் தள கணக்குகளை முடக்க அந்நாட்டு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த ஏப்ரலில், தடை செய்யப்பட்ட சில கணக்குகள் மீண்டும் செயல்படுத்தியதற்காக எக்ஸ் நிறுவனம் பிரேசிலில் சட்டப்பூர்வ பிரதிநிதியை 24 மணி நேரத்தில் நியமிக்க கெடு விதிக்கப்பட்டது. 24 மணி நேர கெடு முடிந்ததைத் தொடர்ந்து, உயர்நீதிமன்ற நீதிபதியின் உத்தரவின்படி எக்ஸ் தளத்திற்கான தடையை அமல்படுத்தும் நடவடிக்கையை பிரேசில் அரசின் தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ஆரம்பித்துள்ளது. இது சர்வதேச அளவில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.