புதிய சாதனை படைத்த கமிந்து மெண்டிஸ்!

0
88

இலங்கை அணிக்காகக் குறைந்த போட்டிகளில் அதிக சதங்களை விளாசிய வீரர் என்ற சாதனையை கமிந்து மெண்டிஸ் படைத்துள்ளார்.

காலியில் இடம்பெற்று வரும் நியூசிலாந்து அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் சதங்களை தன்வசப்படுத்திருந்தார்.

கமிந்து மெண்டிஸ் 173 பந்துகளை எதிர்கொண்டு 11 பவுண்டறிகளுடன் 114 ஓட்டங்களைப் பெற்று 7ஆவதாக ஆட்டம் இழந்தார்.

7ஆவது டெஸ்ட் போட்டிகளில் விளையாடிவரும் கமிந்து மெண்டிஸ் அனைத்து போட்டிகளிலும் தொடர்ச்சியாக அரை சதம் அல்லது சதம் அடித்த வீரராகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.