எதிர்வரும் தீபாவளியை முன்னிட்டு, பொருட்களை மலிவு விலையில் விற்பனை செய்ய, நுவரெலியா கொட்டகலை வர்த்தக சங்கம் தீர்மானித்துள்ளது.
இன்று, ஐக்கிய கொட்டக்கலை வர்த்தக சங்க கூட்டம், கொட்டகலை ஸ்ரீ முத்துவிநாயகர் ஆலய மண்டபத்தில், சங்கத் தலைவர் புஸ்பா விஸ்வநாதன் தலைமையில் இடம்பெற்ற வேளை, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
கொட்டகலை நகரில், தீபாவளியை முன்னிட்டு, பொருட்களின் விலையை கூடிய விலைக்கு விற்பனை செய்யாமல், நிர்ணய விலையிலும், அதேநேரத்தில் மலிவு விலையிலும் விற்பனை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில், நுவரெலியா விலை கட்டுப்பாட்டு சபை பிரதானி அமில ரத்நாயக்க, சுகாதார பரிசோதகர் எஸ்.சௌந்தர் ராகவன் உட்பட கொட்டகலை வர்த்தகர்கள் பங்கேற்றனர்.