மெக் நிறுவனம், மட்டக்களப்பு மண்முனை மேற்கில், கண்ணிவெடியகற்றும் பணிகளை ஆரம்பிக்க முடிவு

0
72

மட்டக்களப்பு மாவட்டத்தில், கண்ணிவெடி அகற்றும் பணிகளை முன்னெடுத்துள்ள மெக் நிறுவனம், மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில்,
கண்ணிவெடி அபாயமுள்ள பிரதேசங்களை அடையாளப்படுத்தும் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளது.


மெக் நிறுவனத்தின் உத்தியோகத்தர்களால், இன்று மண்முனை மேற்கு பிரதேசத்திலுள்ள கிராம பிரிவில் கடமையாற்றும் கிராம அலுவலர்கள்,
சமுர்த்தி அலுவலர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போன்றோரிடம் சில கிராமங்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ளப்பட்டதோடு, கண்ணிவெடி அகற்றல் பணி தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.