ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற 10 நாடுகளுக்கு இடையிலான ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் அதிசிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்திய வீராங்கனைகளைக் கொண்ட மகளிர் ரி20 உலகக் கிண்ண சிறப்பு அணியை ஐசிசி பெயரிட்டுள்ளது.
மகளிர் ரி 20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் விளையாடிய வீராங்கனைகள் இந்த சிறப்பு அணியில் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். ரி20 உலக கிண்ண கிரிக்கெட் சம்பியன் நியூஸிலாந்தைச் சேர்ந்த நால்வரும் இரண்டாம் இடத்தைப் பெற்ற தென் ஆபிரிக்காவைச் சேர்ந்த மூவரும் இடம்பெறுகின்றனர்.
அத்துடன் இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், பங்களாதேஷ், இந்தியா, அவுஸ்திரேலியா ஆகிய 5 நாடுகளைச் சேர்ந்த வீராங்கனைகளும் சிறப்பு அணியில் பெயரிடப்பட்டுள்ளனர். சிறப்பு அணியின் தலைவியாக தென் ஆபிரிக்க அணித் தலைவி லோரா வுல்வார்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண சுற்றுப் போட்டியின் சிறப்பு அணி
(துடுப்பாட்ட வரிசையில்)
லோரா வுல்வார்ட் (தலைவி – தென் ஆபிரிக்கா), தஸ்மின் ப்றிட்ஸ் (தென் ஆபிரிக்கா), டெனி வியட் ஹொஜ் (இங்கிலாந்து), மெலி கேர் (நியூஸிலாந்து), டியேந்த்ரா டொட்டின் (மேற்கிந்தியத் தீவுகள்), நிகார் சுல்தானா (பங்களாதேஷ்), அஃபி ப்ளெச்சர் (மேற்கிந்தியத் தீவுகள்), ரோஸ்மேரி மாய்ர் (நியூஸிலாந்து), மெகான் சூட் (அவுஸ்திரேலியா), நொன்குலுலேக்கோ மிலாபா (தென் ஆபிரிக்கா), 12ஆவது வீராங்கனை ஈடன் கார்சன் (நியூஸிலாந்து)