திருகோணமலை -சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள சின்னக்குளம் கிராமத்தில் தோட்டம் ஒன்றிலிருந்து மீட்கப்பட்ட கைக்குண்டு நேற்று மாலை, செயலிழக்கச் செய்யப்பட்டது.
தோட்ட உரிமையாளரால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய, சம்பூர் பொலிஸாரால், கைக்குண்டு அடையாளப்படுத்தப்பட்டு, மூதூர் நீதிவான் நீதிமன்றத்தின்
கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.
நீதிமன்ற அனுமதியுடன், கைக்குண்டு மீட்கப்பட்டு, செயலிழக்கச் செய்யப்பட்டது.
சம்பூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.