மட்டக்களப்பு வலயமுறைசார கல்விப் பிரிவின்,ஏற்பாட்டில், பெண்களுக்கான கேக் ஐசிங் பயிற்சி

0
93

மட்டக்களப்பு வலய கல்வி அலுவலக முறை சாரா கல்வி பிரிவால், பெண்களுக்கான திறன் விருத்தி செயற்றிட்டத்தின் கீழ், நடாத்தப்பட்ட கேக் ஐசிங் செய்முறைப்
பயிற்சியின், இறுதி நிகழ்வாக கண்காட்சி நிகழ்வொன்று இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


மட்டக்களப்பு வலயக் கல்வி பனிப்பாளரின் வழிகாட்டலில், 20 பெண்கள் இப் பயிற்சி நெறிக்குள் உள்வாங்கப்பட்டிருந்தனர். தொழில் வழிகாட்டல் மற்றும் உளவளத்துனை ஆலோசனை உத்தியோகத்தர் அழகையா ஜெகநாதனின் ஒருங்கிணைப்பில் பயிற்சிகள் வழங்கப்பட்டன.


இன்றைய கண்காட்சி நிகழ்வில், வலய கல்வி அலுவலக திட்டமிடல் பணிப்பாளர் ஹரணியா சுபாகரன், மட்டக்களப்பு வலய கல்வி அலுவலக நிர்வாக உத்தியோகத்தர்
சதீஷ்குமார் நித்யரஜினி மற்றும் மட்டக்களப்பு வலய கல்வி அலுவலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்