2020 ஆம் ஆண்டு முதல் இதுவரை ரயில் மார்க்கத்தில் மற்றும் ரயில் பழுதுபார்க்கும் இடம் ஆகியவற்றில் மொத்தம் 570 ரயில்கள் தடம் புரண்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, 2020 ஆம் ஆண்டு 98 ரயில்களும், 2021 ஆம் ஆண்டு 115 ரயில்களும், 2022 ஆம் ஆண்டு 132 ரயில்களும், 2023 ஆம் ஆண்டு 139 ரயில்களும், 2024 ஆம் ஆண்டு 86 ரயில்களும் தடம்புரண்டுள்ளன.