28.6 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

லொஹான் மற்றும் மனைவி மீண்டும் விளக்கமறியலில்

சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இலங்கையில் ஒன்றிணைக்கப்பட்ட சொகுசு காரை பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவி ஆகியோரின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.இன்று (07) அவர்கள் நுகேகொட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.அதன்படி எதிர்வரும் 18 ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் லொஹான் ரத்வத்தகே ஒக்டோபர் 31ஆம் திகதி கைது செய்யப்பட்டு பின்னர் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த நவம்பர் 2ஆம் திகதி சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்..லொஹான் ரத்வத்தவிற்கு அங்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததுடன் நவம்பர் 3 ஆம் திகதி லொஹான் ரத்வத்த திடீர் நோய் நிலைமை காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் பின்னர் பொது வார்டுக்கு மாற்றப்பட்டு சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் இருந்தார்.இதேவேளை கார் சம்பவம் தொடர்பில் கடந்த 04ஆம் திகதி கங்கொடவில நீதிமன்றத்தில் ஆஜரான முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் மனைவி ரஷி பிரபா ரத்வத்தவையும் இன்று (07) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.

சம்பவம் தொடர்பில் பல தடவைகள் மிரிஹான பொலிஸில் ஆஜராகி வாக்குமூலமொன்றை வழங்குமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles