மட்டு. வந்தாறுமூலையில் இடிமின்னல் தாக்கியதில் விவசாயியொருவர் உயிரிழப்பு!

0
56

மட்டக்களப்பு வந்தாறுமூலை பெருவெளிவட்டை வயற்பிரதேசத்தில் இடிமின்னல் தாக்கியதில் விவசாயியொருவர் உயிரிழந்துள்ளார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான 48 வயதுடைய கதிர்காம நாதன் ரமேஸ்குமார் என்பவரே உயிரிழந்துள்ளார்.

பெருவெளிவட்டை பிரதேசத்திலுள்ள தனது வயலில் வரம்பு கட்டும் வேலையை முடித்துவிட்டு தனது உறவினர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தபோது இடிமின்னல் தாக்கியுள்ளது.

இதில் மோட்டார் சைக்கிளின் பின் ஆசனத்தின் அமர்ந்து சென்றவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ள நிலையில் மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் உயிர்தப்பியுள்ளார். ஏறாவூர் திடீர்மரண விசாரணையதிகாரி எம்.எஸ்.எம். நசிர் சம்பவ இடத்திற்குச் சென்று முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டார்.

சடலம் உடல் கூறு பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஏறாவூர்ப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.