25 C
Colombo
Thursday, November 21, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவிப்பிரமாணம்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை புதிய அமைச்சர்கள் பதவிப்பிரணமாணம் செய்து கொண்டனர்.
முதலில் பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
தொடர்ந்து புதிதாக 21 அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.

அதற்கிணங்க பிரதமர் ஹரிணி அமரசூரிய – கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்கல்வி அமைச்சராகவும், விஜித ஹேரத் – வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராகவும், சந்தன அபேரத்ன – பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சராகவும் பதவிப்பிரணமாணம், ஹர்ஷன நாணயக்கார- நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சராகவும், சரோஜா சாவித்திரி போல்ராஜ்- மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சராகவும், லால் காந்த – கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்பாசன அமைச்சராகவும், அநுர கருணாதிலக – நகர அபிவிருத்தி, கட்டட நிர்மாணம் மற்றும் வீடமைப்பு அமைச்சராகவும், ராமலிங்கம் சந்திரசேகரம் – கடற்றொழில், நீரியல் வளங்கள் அமைச்சராகவும்,

உபாலி பன்னிலகே – கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சராகவும், சுனில் ஹந்துன்னெத்தி – கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அமைச்சராகவும், ஆனந்த விஜேபால – பொதுமக்கள் பாதுகாப்பு, பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சராகவும், பிமல் ரத்னாயக்க – போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், சிவில் விமான சேவைகள் அமைச்சராகவும், ஹினிதும சுனில் செனவி – புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சராகவும்,

நலிந்த ஜயதிஸ்ஸ – சுகாதாரம், வெகுசன ஊடக அமைச்சராகவும், சமந்த வித்யாரத்ன – பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சராகவும், சுனில் குமார கமகே – இளைஞர் விவகாரம், விளையாட்டு அமைச்சராகவும், வசந்த சமரசிங்க – வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சராகவும்.கிருஷாந்த சில்வா அபேசேன – விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சராகவும் பதவிப்பிரணமாணம் செய்து கொண்டனர்.அனில் ஜயந்த பெர்னாண்டோ – தொழில்துறை அமைச்சராகவும்குமார ஜயகொடி – வலுசக்தி அமைச்சராகவும்தம்மிக்க பட்டபெந்தி – சுற்றாடல்துறை அமைச்சராகவும், இதேவேளை பாதுகாப்பு, நிதி ,பொருளாதார அபிவிருத்தி மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் என்பன ஜனாதிபதியின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles