25 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

தேசியப்பட்டியல் விவகாரம்- ரவிகருணாநாயக்கவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தேசியப்பட்டியல் விவகாரம் குறித்து முன்னாள் அமைச்சர் ரவிகருணாநாயக்கவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தன்னைதானே அறிவித்துக்கொண்டமை தொடர்பில் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையை எடுப்பதற்காக ஐக்கிய தேசிய கட்சியின் விசேட கூட்டமொன்று இன்று இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கட்சிக்கு இரண்டு தேசியப்பட்டியல் ஆசனங்கள் கிடைத்துள்ள நிலைமையில் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினருக்கு ஒரு ஆசனத்தையும்,முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்படும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் பிரிவிற்கு ஒரு ஆசனத்தையும் கட்சி திட்டமிட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாளை இது குறித்து தீர்மானிப்பதற்காக புதிய ஜனநாயக முன்னணி கூடவிருந்தது.

எனினும் முன்னாள் அமைச்சர் ரவிகருணாநாயக்க தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இரகசிய கடிதமொன்றை அனுப்பியுள்ளார். அதில் தன்னை கட்சி நியமித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்- கட்சியின் அனுமதியின்றி இந்த கடிதத்தை அவர் அனுப்பியுள்ளார்.

ஊடகங்களில் ரவிகருணநாயக்கவின் நியமனம் குறித்த செய்திகள் வெளியானதை தொடர்ந்து ,ஐக்கியதேசிய கட்சியின் உறுப்பினர்கள் ரணில்விக்கிரமசிங்கவுடன் இது குறித்து கடும் கரிசனையை வெளியிட்டுள்ளதுடன் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து ஐக்கியதேசிய கட்சியின் கூட்டம் இன்று மாலை இடம்பெறவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles