மாத்தறை, ஊருபொக்க பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பட்டிகல பிரதேசத்தில் நபரொருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஊருபொக்க பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கொலை சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (19) இரவு இடம்பெற்றுள்ளது.
மாத்தறை, பட்டிகல பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய நபரொருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
கொலை செய்யப்பட்டவர் தண்ணீர் எடுப்பதற்காக வீட்டிலிருந்து வெளியே சென்ற போது இனந்தெரியாத நபரொருவர் இவரை அடித்து காயப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து காயமடைந்தவர் எம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சந்தேக நபரை கைது செய்வது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊருபொக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.