25 C
Colombo
Thursday, December 12, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

தேசிய மக்கள் சக்தியின் வெற்றி இலங்கை அரசியலில் ஒரு பூகம்பம் – எரிக்சொல்ஹெய்ம்

அனுரகுமாரதிசநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின்  அதிர்ச்சிதரும் மிகப்பெரிய தேர்தல் வெற்றியை இலங்கையின் அரசியலில் ஒரு பூகம்பம் என  இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் வர்ணித்துள்ளார்.

தமிழர்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் தேசிய மக்கள் சக்தி மிகவும் சிறப்பாக செயற்பட்டுள்ளமை- (குறிப்பாக வடக்கில,)இலங்கையில் இன உறவுகள் குறித்த புதிய ஆரம்பத்திற்கான வலுவான அழைப்பு என முன்னாள் இராஜதந்திரி தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அரசியல் தலைவர்களுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றியுள்ள எரிக்சொல்ஹெய்ம், தேசியமக்கள் சக்தியின் உள்மையமானது நிச்சயமாக ஊழலற்றது என தெரிவித்துள்ளதுடன்,ஊழலை ஒழிப்பது மிகப்பெரிய பணி என குறிப்பிட்டுள்ளார்.

ஊழல் குறித்து வாக்காளர்கள் சீற்றம்

தற்போது பசுமை செயற்பாட்டாளராக பணியாற்றிவருகின்ற எரிக்சொல்ஹெய்ம்,2002 இன் ஆரம்பத்தில் இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும் இடையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உடன்படிக்கை ஏற்படுவதற்கு காரணமாகவிருந்த மேற்குலகின் ஆதரவுடனான சமாதான முயற்சியை  முன்னெடுத்தவர்.

எனினும் இந்த முயற்சிகள் தோல்வியடைந்தன.  மீண்டும் நான்குவருட யுத்தம் மூண்டது இது இறுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் அழிவிற்கும்,அதன் ஸ்தாபக தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உட்பட முழுத்தலைமையும்  கிட்டத்தட்ட அழித்தொழிக்கப்படுவதற்கு காரணமாக அமைந்தது.

நோர்வேயின் சோசலிச இடதுசாரிக்கட்சியின் முன்னாள் தலைவரான எரிக்சொல்ஹெய்ம்,இலங்கையின் இடம்பெறும் விடயங்களை உன்னிப்பாக அவதானிப்பவராக காணப்படுகின்றார்.முன்னர் இலங்கையின் சிங்கள பெரும்பான்மையினத்தவரால் விடுதலைப்புலி ஆதரவாளர் என இவர் விமர்சிக்கப்பட்டார்.

இந்த குற்றச்சாட்டை இவர் தொடர்ந்தும் மறுத்துவந்துள்ளார்.

சீனாவிலிருந்து பெடரலிற்கு வழங்கிய மின்னஞ்சல் பேட்டியில் எரிக்சொல்ஹெய்ம்,நான் நவம்பர் 14ம் திகதி பொதுத்தேர்தலில் தேசியமக்கள் சக்தி வெற்றிபெறும் என எதிர்பார்த்தேன்,ஆனால் அவர்களின் இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் அவர்கள் பெற்றுள்ள பெரும் வெற்றி நான் எதிர்பாராதது என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் அரசியலில் இது ஒரு பூகம்பம், முதல்தடவையாக இலங்கை மக்கள் கொழும்பிற்கு வெளியே இருந்து – ஜனாதிபதியையும்கட்சியையும் தெரிவு செய்துள்ளனர் – அனுராதபுர விவசாயின் மகனை தெரிவு செய்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

வாக்காளர்கள் குறிப்பாக வறியமக்கள் ஊழல் குறித்து சீற்றமடைந்துள்ளனர், பாரம்பரிய உயர் குழாமினர் தங்களை சிறந்த முறையில் பிரதிநிதித்துவம் செய்யவில்லை என கருதினர்,2022 பொருளாதார வீழ்ச்சியின் பின்னர் தங்களது உணவுகளை குறைத்துக்கொள்ளவேண்டிய நிலையேற்பட்டதுகுறித்தும் சீற்றமடைந்துள்ளனர் என எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட ரீதியில் பல பாரம்பரிய அரசியல்வாதிகள் சிறந்தவர்கள் ஆனால்; ஒரு வர்க்கமாக அவர்கள் தோல்வியடைந்துவிட்டனர் இலங்கையை சிங்கப்பூர் வியட்நாம் மலேசியா அல்லது தமிழ்நாட்டை விட குறைவான நிலைக்கு தள்ளிவிட்டனர் என குறிப்பிட்டுள்ளார்.

சிங்கள பகுதிகளில் வேருன்றிய தேசிய மக்கள் சக்திக்கு தமிழர் வாழும் பகுதிகளில் கிடைத்த வாக்குகள் இடதுசாரி கட்சியின் மீதான  தமிழர்களின் வியக்கத்தக்க நம்பிக்கை வாக்கெடுப்பு என  அவர் தெரிவித்துள்ளார்.

இது வடக்குகிழக்கில் இயல்பு நிலை அமைதி என்பவற்றிற்கான பெரு விருப்பத்தை வெளிப்படுத்துகின்றது,என நான் கருதுகின்றேன்,தற்போதைய தேசிய மக்கள் சக்தி கடந்த கால ஜேவிபியில்லை என்ற நம்பிக்கையும் இதற்கு காரணம் என எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

இடதுசாரிஜேவிபியை தனது முக்கிய பலமாக கொண்டுள்ள தேசிய மக்கள் சக்தி 225 ஆசனங்களை கொண்ட நாடாளுமன்றத்தில் 159 ஆசனங்களை பெற்று, பிளவுபட்ட எதிர்கட்சியை அழித்தது,தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மற்றும் பல இனங்கள் வாழும் கிழக்கு மாகாணத்திலும் பல ஆசனங்களை பெற்றுக்கொண்டது.

தேசிய மக்கள் சக்திக்கு தமிழ் மக்களின் வாக்குகள் ,தமிழ் தேசிய அரசியலை அந்த மக்கள் புறக்கணித்ததன் வெளிப்பாடா? என்ற கேள்விக்கு எரிக்சொல்ஹெய்ம் இது புதிய இன உறவுகளிற்கான வலுவான வேண்டுகோள்,தமிழ்மக்களின் விருப்பங்களை தேசிய மக்கள் சக்தியினால் நிறைவேற்ற முடியும் என்றால் அவர்களின் ஆதரவை தக்கவைக்க முடியுமென்றால்,இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தமாற்றமாக விளங்கும் என குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles