மகா இலுப்பள்ளம பகுதியில் நடமாடும் காட்டு யானை!

0
21

அநுராதபுரம் – மகா இலுப்பள்ளம பிரதேசம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானையொன்று சுற்றித் திரிவதால் ஆபத்தான நிலையில் வசிப்பதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக இந்த காட்டு யானை மகா இலுப்பள்ளம நகரில் உள்ள பொறியியல் அலுவலகம், தபால் நிலையம், அரசு நிறுவனங்கள் மற்றும் தோட்டங்களில் சுற்றித் திரிகிறது.

மகா இலுப்பள்ளம உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த சில நாட்களாக யானைகளால் பயிர்கள் மற்றும் ஏராளமான சொத்துக்கள் நாசமாகியுள்ளமை தெரியவந்துள்ளது.

மேலும், யானைகளின் தாக்குதலால் அப்பகுதியில் சில மனித உயிரிழப்புக்களும் ஏற்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காண உயர் அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.