மட்டக்களப்பு தாந்தாமலை கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள காட்டுப் பகுதியில் கிராம உத்தியோகத்தர்கள் இணைந்து நேற்று மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் மூன்று கொள்கலன் சட்டவிரோத கசிப்பு கைப்பற்றப்பட்டது.
கிராம மக்கள் மூலம் தாந்தாமலையை அண்டிய கிராமப் பிரிவுகளில் கடமையாற்றும் கிராம உத்தியோகத்தர்களுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைவாக, காட்டுப்பகுதியில் மேற்கொண்ட தேடுதலில் 120 மில்லி லீட்டர் கசிப்பு கைப்பற்றப்பட்டது.
குறித்த சம்பவத்தின் போது, சந்தேக நபர்கள் அவ் விடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், கைப்பற்றப்பட்ட கசிப்பு யாவும் அவ்விடத்தில் அழிக்கப்பட்டதாகவும் கிராம உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.