மட்டக்களப்பு சின்ன ஊறணி மெதடிஸ்த திருச்சபையினால் நடாத்தப்படும் பாபர அட்கின்ஸ் சிறுவர் அபிவிருத்தி திட்ட சிறார்களின் ஒளி விழா நிகழ்வு நேற்று மாலை இடம்பெற்றது.
சின்ன ஊறணி மெதடிஸ்த திருச்சபையின் பாபர அட்கின்ஸ் சிறுவர் அபிவிருத்தி திட்ட பணிப்பாளரும், இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் கோட்டமுனை சேகரத்தின் முகாமைத்துவ குருவுமான அருட்கலாநிதி அருள் ராஜா தலைமையில், சின்ன ஊறணி மெதடிஸ்த திருச்சபையின் குருவானவர் அருட்பணி கந்தையா ஜெகதாஸ் அடிகலாரின் வழிநடத்தலில் இடம்பெற்ற ஒளி விழா நிகழ்வில், ஞாயிறு பாடசாலை சிறார்கள் மற்றும் ஆசிரியர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், நிகழ்வில் கலந்துகொண்ட அதிதிகளுக்கு நினைவு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.
பிரதம விருந்தினராக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவன், மண்முனை வடக்கு பிரதேச செயலக கிராம நிர்வாக உத்தியோகத்தர் ராஜன், சின்ன ஊரணி கிராம சேவை உத்தியோகத்தர் விமல ஸ்ரீ, சின்ன ஊரணி கிராம பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் தீபகரன், சின்ன ஊறணி மெதடிஸ்த திருச்சபையின் பாபர அட்கின்ஸ் சிறுவர் அபிவிருத்தி திட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள், சிறார்களின் பெற்றோர்கள், என பலர் நிகழ்வில் கலந்துகொண்டனர்