மட்டக்களப்பு ஏறாவூர் ஆறுமுகத்தான் குடியிருப்பு பிரதேசத்தில்; அதிகாலை விபத்து சம்பவம்

0
41

மட்டக்களப்பு ஏறாவூர் ஆறுமுகத்தான் குடியிருப்பு பிரதேசத்தில்; இன்று அதிகாலை விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றது. வேகமாக வந்த கார் ஒன்று மூடியிருந்த வர்த்தக நிலையத்தை உடைத்துக்கொண்டு உட்புகுந்ததனால் அந்த கடை மற்றும் அக்கடைக்குள் நிறுத்தப்பட்டிருந்த வேன் ஒன்றும் சேதமடைந்துள்ளன.

விபத்தை ஏற்படுத்திய கார் பலத்த சேதமடைந்துள்ளது. சாரதியின் தூக்க கலக்கம் இவ்விபத்திற்கு காரணமாக இருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.
இவ்விபத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லையென பொலிஸார் தெரிவித்தனர். ஏறாவூர்ப் பொலிஸார் மேலதிக விசாரனைகளை முன்னெடுத்துள்ளனர்.