மாளிகாதென்ன வீடொன்றிலிருந்து காயங்களுடன் சடலம் மீட்பு!!

0
15

நுங்கமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாளிகாதென்ன பகுதியில் உள்ள வீடொன்றின் அறையிலிருந்து காயங்களுடன் உயிரிழந்த நிலையில் நபரொருவரின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று வியாழக்கிழமை (10) விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

உயிரிழந்தவர் மாளிகாதென்ன, வெயங்கொடை பகுதியைச் சேர்ந்த 50 வயதுடையவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது குறித்த மேலதிக விசாரணைகளில் நுங்கமுவ பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.