உயிருடன் மீட்கப்பட்ட சிறுத்தை உயிரிழப்பு!

0
10

நுவரெலியா – லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டுக்கலை தேயிலை தோட்ட பகுதியில் கம்பிகளில் சிக்குண்டு, காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட சிறுத்தையை காட்டுப்பகுதியில் விடுவிக்கும் பொழுது அது உயிரழந்துள்ளதாக வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மட்டுக்கலை தேயிலை தோட்டப் பகுதியில் கம்பி வலையில் சிக்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சிறுத்தை, கடும் போராட்டத்துக்கு மத்தியில் உயிருடன் பிடிக்கப்பட்டது.

வேட்டையாடுவோரினால் இந்த கம்பி கட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கம்பி வலையில் சிக்கியதால் காயம் ஏற்பட்டிருந்த குறித்த சிறுத்தையை கடும் சிரமத்துக்கு மத்தியில் மீட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

சுமார் 4 அடி நீளமான 4 முதல் 6 வயது மதிக்கத்தக்க ஆண்  சிறுத்தையொன்றே  மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த சிறுத்தையின் உடலை உடற்கூறு பரிசோதனைக்காக ரந்தெனிகல மிருக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.