தலவாக்கலையில் கார் குடைசாய்ந்து விபத்து!

0
22

நுவரெலியாவிலிருந்து தலவாக்கலை நோக்கி அதிவேகமாக பயணித்த கார் ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து சம்பவம் புதன்கிழமை  (14) மாலை   அட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் தலவாக்கலை மல்லியப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து கார் தடுப்பு ஒன்றில் மோதி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது, காரை செலுத்திச் சென்ற சட்டதரணி காயமின்றி உயிர் தப்பியுள்ளார். காருக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதால் விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.