களுத்துறை பிரதேச சபையின் மின்சார ஊழியர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர் களுத்துறை பனாபிட்டியவைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சுகத் பிரசன்ன என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.