கருங்கல் கருமாரியம்மனை காணவில்லை!

0
14

மஸ்கெலியா, சாமிமலை நூத்தி தோட்ட சின்ன சோலங்கந்தை பிரிவில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கருங்கல்லினால் செதுக்கப்பட்ட கருமாரியம்மன் சிலை காணாமல் போயுள்ள சம்பவம் புதன்கிழமை (9) இரவு இடம் பெற்றுள்ளதாக குறித்த தோட்டத்தின் ஆலய பரிபாலன சபை தலைவர் தெரிவித்தார்.

மேலும் “ எமது மூதாதையர் எமது பிரிவில் உள்ள ஆலயத்தில் சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு  மூன்றரை அடி உயரம் கொண்ட, கருங்கல்லால் செதுக்கப்பட்ட கருமாரி அம்மன் சிலையை வைத்து வணங்கி வந்தனர்.

அச் சிலைக்கு பதிலாக புதிய சிலை ஒன்று வைக்கப்பட்டு பழமையான சிலையை ஆலய முற்றத்தில் வைத்து வணங்கி வந்தனர். அந்த பெறுமதி மிக்க சிலை புதன்கிழமை (09) இரவு முதல் காணாமல் போயுள்ளது ” என பரிபாலன சபையினர் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக  மஸ்கெலியா பொலிஸார்  தெரிவித்தனர்.