மட்டக்களப்பு, கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள சவுக்கடி கடற்கரைப் பகுதியில் ஆண் ஒருவர் மர்மமாக உயிரிழந்த நிலையில் திங்கட்கிழமை (11) பகல் 12.00 சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
செங்கலடி கணேச கிராமத்தைச் சேர்ந்த லக்கி என்றழைக்கப்படும் 34 வயதுடைய புத்திரசிகாமணி லக்ஷ்மன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் ஏறாவூர் பகுதியிலுள்ள உறவினரின் தங்க ஆபரண விற்பனை நிலையம் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை (10) மாலை வீட்டை விட்டு வெளியேறி இரவாகியும் அவர் வீடு திரும்பாததால் உறவினர்கள் தேடி வந்துள்ளனர்.
இந்த நிலையில் சவுக்கடி கடற்கரை பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இருப்பதாக பொது மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
அதற்கமைய சம்பவ இடத்திற்கு விரைந்த தடயவியல் பிரிவு பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் அடையாளம் காணப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டுள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.