சுமார் 600,000 ரூபாய் பெறுமதியுடைய வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வந்து கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேற முயன்ற ஒருவர் திங்கட்கிழமை (11) அன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்டி, கன்னேபானவில் பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய அவர், துபாய் நாட்டில் வீட்டு வேலை செய்துள்ளதுடன் திங்கட்கிழமை (11) அதிகாலை ஓமானின் மஸ்கட்டிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவரின் பயணப் பையில் இருந்து “பிளாட்டினம்” மற்றும் “மான்செஸ்டர்” வகையான 40,000 சிகரெட்டுகள் அடங்கிய 200 சிகரெட் அட்டைப்பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபரை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.