மட்டக்களப்பில் 25 கொரோனா தொற்றாளர்கள் மூன்று மரணம்

0
246

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 25 கொரோனா தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளதுடன் மூன்று மரணங்களும் இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நா.மயூரன் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் கடந்த வாரம் மாத்திரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் 171 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.